"உலகத்தின் அனைத்து தாய்மார்களுக்கும் சமர்ப்பணம்"
நட்ட நடு இரவில் வீர்ர்ர்.. என்று அலறிய அழு குரலை கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன்.
எழுந்தவுடனேயே புரிந்தது, அது நடு இரவும் அல்ல அழு குரலும் அல்ல !!
குழந்தையின் சரிப்பு குரல். மைசூரிலிருந்து புறப்பட்ட ரயில் இந்நேரம் பெங்களூரை தாண்டியிருக்க வேண்டும். மணி 11க்குள் தான் இருக்க வேண்டும். ஆம் 10.50. மைசூரில் ரயில் ஏறிய பின்பு இருக்கையில் சாய்ந்து புத்தகம் படித்தவன், என்னையும் அரியாது தூங்கிவிட்டேன்.இன்னும் இரவு சாப்பாடு வேரு சாப்பிடவில்லை.
எதிரே இருந்த குழந்தை மீண்டும் சிரித்தது,களுக்கென்று. 1 வயதுக்குள் தான் இருக்க வேண்டும், cuteஆக சிரித்தது. உடன் இருந்தவள் தாயாக இருக்க வேண்டும், வேறு யாரும் உடன் இல்லை.பெங்களூரில் ஏரி இருந்திருப்பார்கள் என நினைத்தேன். குழந்தையை மடியில் வைத்திருந்தாள்.
குழந்தையின் பெயர் என்ன என்று கேட்டேன். ஹிந்தி மே போலோ என்றாள். என் ஹிந்தி அறியாமைக்காக என்னையே மனதுக்குள் திட்டிக் கொண்டேன். ஹிந்தி ஓரளவு புரிந்தது ஆனால் பேச வரவில்லை.
"What's the child name" என்றேன் அடுத்தாக.
"ஹிந்தி மே போலோ .."
ம்ம்ம்... "ஹிந்தி மாலும் நஹி.. Just தோடா தோடா மாலும் ஹை".
சிரித்தாள். மனதிர்க்குள் மீண்டும் திட்டிக் கொண்டேன். சே ஹிந்தி தப்பா பேசிட்டோமோ.. சிரிக்கறாளே ! அசட்டு சரிப்பு சிரித்தேன்.
பசித்தது .அம்மா கட்டி கொடுத்த புளியோதரயையும் chipsம் எடுத்து சாப்பிட தொடங்கினேன்.எதிரே இருந்த குழந்தை கையை நீட்டியது.. அங்கும் இங்கும் கை அசைத்தது, எட்டவில்லை. நிமிர்ந்து பார்த்து தாயை நோக்கி ஒரே ஒரு chips நீட்டினேன். அதை அவள் வாங்கி ஒரு நுனியை உடைத்து, சுவைத்து, அதன் மேல் உள்ள காரப் பொடியை உதிர்த்து, மீதியை சிரிது சிரிதாக உடைத்துக் குழந்தைக்கு கொடுத்தாள்.
குழந்தை மீண்டும் கையை நீட்டியது..நான் chipsஐ எடுத்து நீட்ட போக, வேண்டாம் என்று சைகை செய்தாள்.
கை கழுவி விட்டு வந்தேன். குழந்தை சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது. என்னை நோக்கி தாவியது, அவள் கொடுக்கவில்லை. அவளும் ஒற்றை கையில் குழந்தையை சமாளித்து உணவருந்தினாள்.இம்முறை அவள் கையிலிருந்து நெளிந்து மீள தவிக்கும் குழந்தையை பிடித்துக் கொண்டேன். அவளும் பிடி தளர்க்க, குழந்தை என்னிடம் வந்தது.
சற்று நேரம் என்னிடம் விளையாடியது. அவள் சாப்பிட்டு முடித்த பின்பும் என்னிடம் இருந்தது. சற்று நேரத்தில் அவளை நோக்கி பாய்ந்தது.
நான் உட்கார்ந்திருக்கும் சீட்டின் lower birth allot செய்யபட்டவர், யோவ் எழுந்திருயா என்ற முறையில் பார்த்தார். எனக்கு middle birth. ஏறி middleல் படுத்தேன். கண்கள் எதிர் lower birthஐ நோக்கின. இத்தனை இரவில் கை குழந்தையுடன் ஏன் தனியாக பயணம், மனதினுள் நினைத்தேன்? ஆயிரம் காரணங்கள் தோன்றின.
கவனத்தை கலைக்க வந்தார் ஒருவர்.
"Madam this is my seat".
அவள் பதில் கூறாது இருந்தாள். Ticketஐ அவளிடமிருந்து வாங்கி பார்த்தேன். விஷயம் புரிந்தது. அவளுக்கு எதிர் seat middle birth. சங்கடமும் புரிந்தது. குழந்தையுடன் தனியே உள்ளதால் lower birth prefer செய்வாள். புதிதாக வந்த நபரிடம் விஷயத்தை விளக்கினேன். தயக்கமில்லாமல் No Problem என்று சொல்லி middle birthல் படுத்து விட்டார்.
என்னை பார்த்து நன்றி என்ற அர்தத்தில் சிரித்தாள். Welcome என்ற அர்தத்தில் நானும் சிரித்தேன். தலையனையாக என் பையை வைத்து உறங்கலானேன்.
10 நமிடம் கழித்து கீழே பார்த்தேன். Rubber sheet போட்டு அதில் குழந்தையை விட்டு மீதி இடத்தில் அவளும் படு்த்துக்கொண்டு ஒரு கையை குழந்தையின் மேல் வைத்து மெதுவாக தட்டி கொண்டிருந்தாள். குழந்தை உறங்கிக்கொண்டிருந்தது. தாய்மையின் சிறப்பினை மனதால் வாழ்த்திக்கொண்டு நொடிப்பொழுதில் தூங்கிவிட்டேன், விடிந்தால் "அன்னையர் தினம்" என்பதையும் மறந்து.
காலை எழுந்ததும் முதல் அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தையும் இல்லை அவளும் இல்லை.
இரண்டாம் அதிர்ச்சி. என் சட்டை பையில் ஒரு லெட்டர், ஹிந்தி எழுத்துக்களுடன். ரயில் Basin Bridgeஐ அடைந்தது. எங்கே இறங்கியிருப்பாள்?
சென்னையில் இறங்கியதும் கௌதமிற்கு phone செய்தேன்."டேய் கௌதம் இப்பவே உங்க வீட்டிக்கு வரேண்டா.. விவரம் நேரில்". ஆம் என் நண்பர்களில் ஹிந்தி அதிகம் தெரிந்தது கௌதமிற்குதான்.
கௌதம் அப்படியே கடிதத்தை மொழி பெயர்த்தான்.
"அன்புள்ள சினேகிதருக்கு, ரயில் பயணத்தில் விடை பெறாமல் போனதற்காக வருந்துகிறேன். நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தீர்கள். போரில் கணவனை இழந்த மனைவிக்கும் குழந்தைக்கும் நம் மக்களிடையே அனுதாபம் சற்று குறைவு தான். அத்தகைய தருணத்தில் உங்களை சந்தித்ததில் எனக்கு மிகையான சந்தோஷமே! நான் ஆவடியில் உள்ள ராணுவ குடியிரிப்பில் தங்க உள்ளேன். மீண்டும் ஒரு முறை உங்களை உங்களது மனைவி மக்களோடு சந்தித்தால் மகிழ்ச்சிக்குள்ளாவேன். ஒருவேளை சந்திக்காமல் போனால், உங்களுடன் விளையாடிய குழந்தை, Major Ashok Pratap Singhஆக வருங்காலத்தில் தன்னையும் என்னையும் ஞாபகமூட்டுவான். நன்றி."
அதிர்ந்து போனேன். என் அனைத்து மனக் கேள்விகளுக்கும் விடை இருந்தது. கௌதமிற்கு நடந்ததை விளக்கினேன். இன்று இருவரும் office leave போட்டு ஆவடி போகலாமென்று தீர்மானித்தோம்.
இதற்கிடையே மைசூர் phone செய்தேன். "Happy Mother's Day ma". சற்று நேரம் பேசிவிட்டு லீலாவிடம் phone கொடுக்கச் சொன்னேன்.
லீலா என் மனைவி. திருமணமாகி 3 வருடங்கள் ஆயிற்று, இன்னும் குழந்தை பேறு கிட்டவில்லை. என்னுடன் சென்னையில் இருந்தவள் இப்பொழுது அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாததால் அங்கு உள்ளாள்.
லீலாவிடம் அனைத்தையும் சொன்னேன். முழுவதும் பொறுமையாக கேட்டு பதில் பேசினாள்."கஷ்டப்படராங்கன்னு குறிப்பிட்ட தொகை மட்டும் கொடுத்துட்டு வராதீங்க, பய்யனோட முழு படிப்பு செலவும் ஏத்துகற்தா சொல்லுங்க. நான் சென்னை வந்ததும் அவங்கள வந்து பாக்கரேன்னு சொல்லுங்க."
லீலாவின் தெளிவான பேச்சு என்னை கண்ணீரில் ஆழ்த்தியது.
"Happy Mother's Day" என்றேன்.
"எனக்கெதுக்குங்க"
"ஆங். இன்னிலேந்து உனக்கும் எனக்கும் promotion. Ashok Pratap சிங்கின் வளர்ப்பு தாய் தந்தையாக" என்றேன்.
சிரித்தாள்.